சாத்தான்குளம் வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியான ரேவதிக்கு பாதுகாப்பு விடுமுறையுடன் கூடிய சம்பளம் வழங்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருக்கிறது.

சாத்தான்குளம் தந்தை தந்தை மகன்  போலீசாரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது சிபிசிஐடி கையில் இருப்பதால் குற்றம் சாட்டப்பட்ட எஸ்ஐ பாலகிருஷ்ணன் ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் உட்பட 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பது தலைமைக்காவலர் ரேவதி தான். ஆண் ஆதிக்கம் நிறைந்த காவல் நிலையத்தில் ஒரு பெண்ணாக அங்கு நடந்த கொடுமைகளை தட்டிக்கேட்க முடியாமல் மனக்கொதிப்புடன் காணப்பட்டார் ரேவதி. சாத்தான்குளத்தில் நடுவர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்திய போது தைரியமாக என்ன நடந்தது என்பதை சொன்னவர் வீரமங்கை ரேவதி. ஒரு ஆவேசத்தில் என்ன நடந்தது என்பதை சொல்லிவிட்டார். அதன் பிறகு தனக்கு தன்துறையில் இருந்தே பிரச்சனை வரும் தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.


இதையெல்லாம் கவனித்த நீதிமன்றம் ரேவதிக்கு விடுமுறையுடன்  கூடிய சம்பளம் மற்றும் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள்.

இந்நிலையில், தென் மண்டல ஐ.ஜி.யாக இன்று பொறுப்பேற்ற முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்..."காவல்துறையில் ஆங்காங்கே குறைகள் இருக்கலாம், மறுக்கவில்லை. லாக்கப் மரணம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே காவல்துறையின் நிலைப்பாடு. லாக்கப் மரணங்களை தவிர்க்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக காவல்துறையினருக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலரின் வேண்டுகோளின்படி அவருக்கு ஊதியத்துடன் ஒரு மாத விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. காவலர் ரேவதிக்குத் தேவையான பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. தேவையான உதவியும் வழங்கப்படும். சிபிசிஐடி போலீசாருக்கு உள்ளூர் போலீசார் முழு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.