குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையை பெற்ற மகளை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களாக அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை சற்றும் எதிர்பாராத தாய் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தனது மகளிடம் கேட்டார். அதற்கு சிறுமி இளைஞர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் யார் என்று தனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையில் தாய் புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் விசாரணை நடத்தியதில் எந்த பயனும் இல்லை. 

பின்னர், சிறுமியிடம் போலீசார் மிரட்டி விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதில், எனது தந்தையை  இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக கதறிய படி சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் தந்தையை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவரும் தவறை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.