மதுரை மாவட்டம் திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்  மகன் சிவ பிரசாந்த் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சடையாண்டி என்பவரது மகள் சினேகா ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

தன் மகள் காதல் திருமணம் செய்ததால் காதலனின் தந்தையை வெட்டிகொலை செய்த பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை மாவட்டம் திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிவ பிரசாந்த் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சடையாண்டி என்பவரது மகள் சினேகா ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி நேற்று திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மற்றும் திடீர் நகர் காவல் நிலையத்திற்க்கு சென்று தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுள்ளனர். 

இதனையடுத்து, போலீசார் இருவரது பெற்றோர்களையும் அழைத்து சமரசம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில், சிவ பிரசாந்தின் தந்தை ராமச்சந்திரன் மட்டும் காவல் நிலையத்திற்கு வந்து காவலர்களிடம் மகனின் திருமணத்தில் எதிர்ப்பை நீக்கிக்கொண்டதாகவும், அதேபோல் சினேகாவின் தந்தை சடையாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் சமரச பேச்சுவார்த்தைக்கு காவல் நிலையத்திற்கு வரவில்லை என்று என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் ராமச்சந்திரனை சந்தித்த சடையாண்டி பெரியார் பேருந்து நிலையம் அருகே இருவருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து சடையாண்டி மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமசந்தின் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமசந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, சடையாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தின் காதலன் தந்தையை பெண்ணின் தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.