Asianet News TamilAsianet News Tamil

டேன்ஸ் ஆடும் போது தன்னைத்தானே குத்திக் கொண்ட நபர் - போதையில் அத்துமீறியதால் உயிரிழப்பு!

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Dancing Man Stabs Himself During Stunt At Holi Celebrations
Author
Tamil Nadu, First Published Mar 19, 2022, 2:42 PM IST

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில் ஹோலி கொண்டாட்த்தின் போது 38 வயதான நபர் உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் அங்கமாக இந்தூரில் உள்ள பங்கங்கா பகுதியை சேர்ந்த 38 வயகான கோபால் சோலன்கி மகிழ்ச்சியில் நடனம் ஆடி கொண்டிருந்தார்.

நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த கோபால் சோலன்கி தன் கையில் கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு வீசி கொண்டிருந்தார். மது போதையில் மிகத் தீவிரமாக நடனமாடி கொண்டிக்கும் போது, திடீரென உணர்ச்சிவசப்பட்ட கோபால், திடீரென தன் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு தனது இதயத்தின் மீது குத்திக் கொண்டார். ஆர்வ மிகுதியில் கத்தியால் குத்திக் கொண்ட போதும், அவர் கையில் இருந்த கத்தி இதயத்தை பதம் பார்த்தது.

Dancing Man Stabs Himself During Stunt At Holi Celebrations

இரண்டு முறை பலமாக கத்தி உடலில் இறங்கியதை அடுத்து, சில நொடிகளிலேயே கோபால் சோலன்கி உடலில் இருந்து இரத்தம் பீய்த்துக் கொண்டு வெளியேறியது. இரத்தம் வடிந்த நிலையில், கோபால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இவரது செயலை பார்த்து அதிர்ந்து போன நண்பர்கள் மற்றும் குடும்பத்தார், அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

சுயநினைவில்லாத நிலையில், கோபால் சோலன்கியை மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதே தகவலை அப்பகுதி காவல் துறையும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

Dancing Man Stabs Himself During Stunt At Holi Celebrations

கோபால் சோலன்கி மற்றும் அவரது நண்பர்கள் மது போதையில் நடனமாடி கொண்டிருந்தது, கோால் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு கீழே விழுந்தது என பரபர சம்பவம்  முழுக்க வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

பண்டிகை தினத்தை மிகழ்ச்சியாக தொடங்கிய கோபால் சோலன்கி குடும்பத்தார், அவரின் மறைவை அடுத்து துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது கோபால் சோலன்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கொண்டாட்டம் என்ற பேரில், சில தீய பழக்கங்களால் எல்லை மீறினால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம் ஆகும். மது போதையில் முடிந்த வரை ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது, ஆயுதங்களை பயன்படுத்துவது போன்றவைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios