சினிமா ஆசைக்காட்டி பள்ளி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து அனுபவித்த 2 குழந்தைகளுக்கு தந்தையான நடன ஆசிரியர் அஜித்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த முளகுமோடு பகுதியில் தீபம் தியேட்டர்ஸ் என்ற பெயரில் நடன குழுவை ஜான் பிலிப்போஸ் நடத்தி வருகிறார். இவரது நடனக் குழுவில் நடன இயக்குனராக உள்ள அபி அஜித்குமார் என்பவர் தான் மேடை நடன நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை செய்து வந்துள்ளார். நடன ஆசிரியரான இவருக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் நடன ஆசிரியராக பணிபுரியும் பள்ளியில் நடன பயிற்சிக்காக வந்த மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கோவில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடன நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளனர். 

இந்நிலையில் மாணவியின் அழகில் மயங்கிய அஜித்குமார் உன்னை சினிமாவில் ஹீரோயின் ஆக்குகிறேன் என்றும், தனக்கு பல துணை இயக்குநர்களை தெரியும் எனவும் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். மாணவியும் ஹீரோயின் கனவில் அஜித்குமாருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி மாணவியை தொடர்பு கொண்ட அஜித்குமார், துணை இயக்குநர்கள் உன்னை பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றார். 

இதை நம்பிய மாணவி அஜித்குமாருடன் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டணத்திற்கு சென்றுள்ளார் அங்கு ஒரு வீட்டில் மாணவியை தங்க வைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார் அஜித்குமார்.. பிறகு இது துணை இயக்குநர் வீடு என்றும் அவருடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள் எனக்கூறி, தனது நண்பருக்கும், மாணவியை விருந்தாக்கியுள்ளார். பின்னர் உனக்கு இன்னும் சரியாக நடிக்கவரவில்லை என்று மீண்டும் காயல்பட்டணம் அழைத்து வந்துள்ளனர். மாணவியிடம் அங்குள்ள கலைஞர்கள் அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே நடனப் பள்ளிக்கு சென்ற மகளை காணவில்லை என்று தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பல விசாரணைகள் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போலீசார் திணறி வந்தனர். பின்னர் நடன இயக்குநர் அஜித்குமார் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி போலீஸ் புகார் அளித்தார்.

இதையடுத்து நடன கலைஞர் அஜித் குமாரின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போலீசார், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் விசாரித்தனர். கோயில் விழாவில் நடன நிகழ்ச்சி ஒன்றில் இருந்த நடன இயக்குனர் அபி அஜித்தை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அதேபோல் மாணவியை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து மேடை நடன இயக்குனராக அபி அஜீத்தை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். மேலும் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.