மதுரையில், குறிப்பிட்ட சமுதாய பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகத்தை தடை செய்யக்கோரி, புரட்சிப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய, 'கூகை' என்ற புத்தகத்தில், தலித் சமுதாய பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தவறான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இந்த புத்தகத்தை தடை செய்யக்கோரி, புரட்சிப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, கூகை புத்தகத்தை எரிக்க முயன்றதால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூகை புத்தகத்தையும், அதனை வெளியிட்ட அச்சகத்தையும் தடை செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் ராஜசேகரனிடம் மனு அளித்தனர், குறிப்பிட்ட சமூக பெண்களை இழிவுபடுத்தும் இது போன்ற புத்தகங்களை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.