ராமர் கடவுள் இல்லை: 17 வயது தலித் சிறுவன் மீது தாக்குதல்!
ராமர் கடவுள் இல்லை என பதிவு போட்டதுக்காக 17 வயதான பள்ளி செல்லும் தலித் சிறுவன் மீது வலது சாரி அமைப்பினர் தாக்குத நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் பிரமாண்டமாக நடைபெற்ற போது, ராமர் கடவுள் இல்லை என பதிவு போட்டதுக்காக 17 வயதான பள்ளி செல்லும் தலித் சிறுவன் மீது வலது சாரி அமைப்பினர் தாக்குத நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பிதாரில் 17 வயதான தலித் சமூகத்தை சேர்ந்த பள்ளி செல்லும் மாணவன், ராமர் மற்றும் ஹனுமான் ஆகியோர் கடவுள் இல்லை என்ற குறிப்புடன் கூடிய படத்தைப் பகிர்ந்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த வலதுசாரி கும்பல், அச்சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது.
அயோத்தி ராமர் சிலையைச் செதுக்க பயன்படுத்திய அபூர்வ கருங்கல்!
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, கர்நாடக மாநிலம் பிதாரில் உள்ள ஹம்னாபாத் வட்டம் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சிறுவனை தாக்கி அதனை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்திற்குள் நுழைந்தது ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை!
அந்த வீடியோவில், பள்ளி மாணவனை காவி நிற துண்டு அணிந்த பலர் சூழ்ந்து கொண்டு நிற்கின்றனர். ஆட்டோவில் இருந்து மாணவன் இறங்கியதும், அவரைச் சூழ்ந்திருந்த ஒருவர் அந்த மாணவனை அறைகிறார். பின்னர், அந்த மாணவனை தரதரவென கோயிலுக்குள் அழைத்து சென்று தெய்வத்தின் முன் சாஷ்டாங்கமாக விழ வைக்கின்றனர். மேலும், மாணவனின் செல்போனையும் அக்கும்பல் சரி பார்க்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.