வேலை தேடும் அழகான இளம் பெண்களை லட்சங்களில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி, ஏமாற்றி 600 இளம் பெண்களை, நிர்வாணமாக்கி, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சென்னை சாப்ட்வேர் என்ஜினியரை, ஆந்திர போலீசார் பொறி வைத்து பிடித்திருக்கின்றனர்.  

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின், ஹைட்டெக் சிட்டியான,  சைபராபாத்திற்குட்பட்ட மியாப்பூர் போலீசில், கடந்த மாதத்தில், இளம்பெண் அளித்த  புகாரில் சுற்றி வளைத்தது போலீஸ்.
அதில், பிரபல ஸ்டார் ஹோட்டலில் வேலை வாங்கித் தருவதாக கூறி, தனது நிர்வாண படத்தை வைத்து, ஒருவன், தன்னை மிரட்டுவதாகவும், அவன் சென்னையை சேர்ந்தவன் என்றும் கூறி, தனது வாட்ஸ் ஆப் உரையாடலையும், அந்த நபரின் செல்போன் எண்கள் உள்ளிட்ட தகவல்களையும் அளித்துள்ளார். இதையடுத்து,  கடந்த 4 மாதங்களாக, இளம் பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய அவனை தேடிவந்த, தெலங்கானா போலீசார், அவனை, சென்னையில் வைத்து கைது செய்திருக்கின்றனர்.

அவனது செல்போன் மற்றும் லேப்டாப்பை ஆராய்ந்தபோது, போலீசார் அதிர்ந்து போயுள்ளனர். அந்த லேப்டாப் கம்பியூட்டரில்  கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் நிர்வாண வீடியோக்கள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாண போட்டோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியான போலீசார்  இதுகுறித்து அவனிடம் விசாரித்தபோது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதீப் என்று பெண்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவனது உண்மையான பெயர், கிளமெண்ட் ராஜ் என்பதும், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த இவன் சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்திருக்கிறான்.

இவனது மனைவியும் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது. பிரதீப் என்கிற கிளமெண்ட் ராஜ், நைட் ஷிப்டில் பணியாற்றியிருக்கிறான். இவன் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்புபோது, அவனது மனைவி, பணிக்கு புறப்பட்டுச் சென்றுவிடுவதும் தெரியவந்துள்ளது.

பகல் நேரங்களில், வீட்டில் தனிமையில் இருந்த பிரதீப், பிரபல வேலைதேடும் வெப்சைட்டில், தன்னை HR என பதிவு செய்து, பிரபல ஸ்டார் ஹோட்டலுக்கு , ரிஷப்ஷனிஸ்ட் தேவை எனக்கூறி, அழகான இளம் பெண்களின் எண்களை சேர்த்து வைத்துக்கொண்டு இப்படி செய்ததை, மியாப்பூர் போலீசார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

முதலில், தாம் சேகரித்த போன் நம்பர்களில், இளம்பெண்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பிரதீப், அவர்களோடு ஜாலியாக பேசி, தனது பாலியல் தாகத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறான். நாளடைவில், வேலை தேடிக் கொண்டிருக்கும் அழகான பெண்களை குறிவைத்து ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளான். அந்த வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட இளம்பெண்களின் செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளும் அவன், தங்களது ஸ்டார் ஹோட்டலுக்கு, லட்ச ரூபாய் சம்ளத்தில், ரிஷப்ஷனிஸ்ட் வேலைக்கு தேவை என கூறி, போனில் இண்டர்வியூ செய்திருக்கிறான். 

பின், தங்கள் போட்டோவை நம்ப முடியாது என்றும், எனவே, தமது பெண் ஹெச்.ஆர். வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொள்வார் என்றும் கூறியிருக்கிறான். இதையடுத்து, பெண் பெயரில், அவனே, அந்த இளம்பெண்களை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டிருக்கிறான். அப்போது, தங்களது தற்போதைய போட்டோவை எடுத்து அனுப்புமாறு சொல்லியிருக்கிறார். போட்டோவை அனுப்பும் பெண்களிடம், தாங்கள் அழகாக இருக்கிறீர்கள்... இருந்தாலும்., தங்களது உடலமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்... தானும் ஒரு பெண் என்பதால், எந்த பிரச்சினையும் வராது எனக், பெண் ஹெச்.ஆர் போல வீடியோ சாட் செய்துள்ளான். இதனை நம்பி, பெண்களும், தங்களது முழு உடல் நிர்வாண ஸ்டில்ஸை அனுப்பியிருக்கின்றனர்.

அப்கடைசியாக, வாட்ஸ் ஆப் வீடியோ காலில் வருமாறும், ஒருமுறை நேரில் பார்த்துவிடலாம் என பெண் ஹெச்.ஆர் போல கூறியிருக்கிறான். பெண் HR தான் எதிர்முனையில் இருக்கிறார் என நினைத்த, இளம் பெண்களும், நிர்வாணமாக வீடியோ காலில் வந்துள்ளனர். இதனை பிரத்யேக சாப்ட்வேர் மூலம், மொபைல் போனில் வீடியோவாக பிரதீப் ரெகார்ட் செய்து வந்திருக்கிறான். சில நாட்கள் கழித்து, அந்த பெண்களை போன் போட்ட பிரதீப், தன்னிடம் உங்களது நிர்வாண வீடியோக்கள் இருக்கிறது என சொல்லி, அவர்களை மிரட்டி பணம் பறித்திருக்கிறான்.

இந்த தகவல்களை அறிக்கையாக வெளியிட்டிருக்கும் சைபராபாத் நகரின், மியாப்பூர் போலீசார், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்களின் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இவனிடம் ஹைதாராபாத்தைச் சேர்ந்த 60 இளம்பெண்கள் ஏமாந்துள்ளது தெரிகிறது.