தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடலூரில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக பெண்ணின் தலையில் அம்மி கல்லைப்போட்டு கொடூரமாக இளைஞர் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தஞ்சை கீழவாசல் வீதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி-தனலட்சுமி தம்பதி. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெள்ளைச்சாமி இறந்து விட்டார். இதனையடுத்து  தனலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அதே பகுதியில் வேலை பார்த்து வந்த போது கடலூர் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து வாலிபர் தனலட்சுமியை தஞ்சாவூரில் இருந்து கடலூருக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார். ஆனால் குழந்தைகளை தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றார். தனலட்சுமியை மட்டும் கடலூர் கூத்தப்பாக்கத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்கள் இருவரும் ஒரு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். 

நேற்று இரவு திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த வாலிபர் தனலட்சுமியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்து விட்டு இந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் எட்டிப்பார்த்த போது ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி பிணமாக கிடப்பை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.