கேரளா சேர்த்தல பட்டினங்காடு கொல்லம் வெளி காலனியை சேர்ந்த ஷரோன் - ஆதிராவுக்கு  ஒன்றரை வயதில் ஆதிஷா என்ற பெண் குழந்தை உள்ளது. 

கடந்த 30-ம் தேதி இரவு திடீரென்று குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து போனதாக கூறி  ஆதிரா, வாயில் வயிற்றில் அடித்தப்படி கதறியது ஊரையும் நம்பவைத்தார். அப்போது பார்த்த அக்கம்பக்கத்தினருக்கு குழந்தை இறந்து கிடந்தது, சந்தேகத்தை ஏற்படுத்தியதால், பிரேதப பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் உடம்பில் எந்த காயமும் இல்லை மேலும் மூச்சு திணறி குழந்தை இறந்ததாக கூறினார்கள். 

இது அக்குழந்தையிம் தாய் சொன்னதுக்கு எதிராக இருந்ததால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. மேலும் இந்த விஷயம் போலீசாருக்கு போக தாய் ஆதிராவை பிடித்து விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் இன்று அதிர்ச்சியான விஷயத்தை கூறினார் ஆதிரா. இரவு 12.30 மணிக்கு நான் எனது தோழியுடன் மொபைல் ஃபோனில் வாட்ஸ் அப் சாட் செய்துகொண்டிருந்தேன். அப்போது எனது குழந்தை பாலுக்கு அழுதது, நானும் கொஞ்ச நேரம் கழித்து பால் கொடுக்கலாம் என்று குழந்தையை தட்டி கொடுத்தேன். அது அழுகையை நிறுத்தாமல் இன்னும் சத்தமாக கத்தியது.

கோபமடைந்த நான் உடனே சத்தம் வெளியே கேட்காமல் இருக்க குழந்தையின் வாயை அழுத்தமாக பொத்தினேன் பின்னர் வாயில் கையை பொத்தி வைத்தப்படி அப்படியே கவனம் இல்லாமல் வாட்ஸ் அப்பில் இருந்ததால் குழந்தை இறந்து போனது என்றார் இதையடுத்து போலீசார் ஆதிராவை கைது செய்தனர்.