கோவை மாவட்டம் சூலூர்  அருகே உள்ள தனியார் பொறியில் கல்லூரியில் கொடைக்கானலைச்  சித்திக் ராஜா, நிலக்கோட்டையைச் சேர்ந்த  ராஜசேகர் மற்றும்  ராஜபாளையம் கவுதம், கருப்பசாமி  ஆகிய 4 பேரும் படித்து வந்தனர். 

நண்பர்களான இவர்கள்  இருகூர் அருகே ராவுத்தர் பாளையம் பகுதியில்  உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து நேற்றிரவு மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆழப்புழா -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்  அவர்கள் மீது மோதியது.

இதில்  சம்பவ இடத்திலேயே  மாணவர்கள் 4 பேரும் பலியாயினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.