Asianet News TamilAsianet News Tamil

பூஜைக்கு வந்த பூசாரியுடன் மனைவி உல்லாசம்.. வீடியோ எடுத்த கேவலமான கணவர்.. இறுதியில் நடந்தது என்ன?

பூசாரி வசதியானவர் என்பதை அறிந்த அந்த பெண் அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். பவ்யாவும் அந்த அர்ச்சகரிடம் ஆசை வார்த்தை கூறி தன்னுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். இதை அவரது கணவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

Couple arrested for honey trapping priest in Mangaluru
Author
Mangalore, First Published Jan 24, 2022, 8:37 AM IST

பூஜை செய்யும் பூசாரியுடன் உல்லாசம் கொண்டு அதை வீடியோ எடுத்து அவரிடம் ரூ.19 லட்சம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தம்பதியை கைது செய்துள்ளனர். 

கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவ்யா (30). இவரது கணவர் குமார் புராஜூ (35). இவர் ஹாசன் மாவட்டம் அரக்கலகுடுவை சேர்ந்தவர். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர். இந்நிலையில், தம்பதி வீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதாக கூறி சிக்மக்ளூருவை சேர்ந்த அர்ச்சகர் ஒருவரை சந்தித்துள்ளனர். அவர் ஜோதிடராகவும் பணி செய்து வருவதால் அவரை பரிகார பூஜை செய்ய வீட்டிற்கு அழைத்தனர்.

Couple arrested for honey trapping priest in Mangaluru

அப்போது அந்த பூசாரி வசதியானவர் என்பதை அறிந்த அந்த பெண் அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். பவ்யாவும் அந்த அர்ச்சகரிடம் ஆசை வார்த்தை கூறி தன்னுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். இதை அவரது கணவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில், பூஜை எல்லாம் முடிந்து அர்ச்சகர் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது குமார் அந்த அர்ச்சகருக்கு போன் செய்து தனக்கு பணம் கொடுக்குமாறும் இல்லாவிட்டால் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை சமூகவலைதளங்களில் போட்டுவிடுவேன் என்றும் குமார் மிரட்டியதாக தெரிகிறது.

Couple arrested for honey trapping priest in Mangaluru

இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் ரூ. 15 லட்சத்தை குமார் தம்பதியிடம் கொடுத்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் அர்ச்சகரை போன் செய்த குமார், மீண்டும் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுவரை ரூ.19 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பொறுமை இழந்த பூசாரி காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறி கதறியுள்ளார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios