திரைப்பட சூட்டிங்கிற்காக கூறி அச்சடித்த கள்ள நோட்டு.! காய்கறி கடையில் கொடுத்து மாற்றிய கும்பல்- வெளியான தகவல்

திரைப்பட சூட்டிங்கிற்காக கள்ள நோட்டை அச்சடித்து அதனை காய்கறி உள்ளிட்ட கடைகளில் மாற்றிய முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 45 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். 
 

Counterfeit notes worth Rs 45 lakh seized in Chennai

மக்கள் ஏமாறும் வரை மோசடிகள் நடைபெற்று கொண்டிருக்கும் அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் மணி(27). இவரும்  இவரது சகோதரர் தினேஷும் சேர்ந்து வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். மாலை நேரத்தில் வேலை முடிந்து வீடுகளுக்கு திரும்புபவர்கள் காய்கறியை வாங்கி செல்வார்கள். இதனால் மாலை நேரத்தில் கூட்டமானது அதிகரித்து காணப்படும். இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம கும்பல் காய்கறி வாங்குவது போல் கள்ள நோட்டை கொடுத்து காய்கறிகளை வாங்கி சென்றுள்ளனர். இதனை அறியாத கடை உரிமையாளர் கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி வாங்கும் போது கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. 

Counterfeit notes worth Rs 45 lakh seized in Chennai

இதனையடுத்து பணத்தை சர்பார்த்து வாங்க முடிவு செய்தவர்கள், ஒரு முறைக்கு இரண்டு முறை பணத்தை சரிபார்த்துள்ளனர். இந்தநிலையில் நேற்று மாலை முதியவர் ஒருவர்  670 ரூபாய்க்கு காய்கறி ,பழங்கள் வாங்கிவிட்டு, மூன்று புதிய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். மேலும் 670 ரூபாய் போக மீதி தொகையும், ஒரு 500 ரூபாய் நோட்டுக்கு சில்லறையும் கேட்டுள்ளார். அப்போது அந்த நோட்டு பள பளவென சாதாரன ரூபாய் நோட்டை விட புதிதாக தெரிந்துள்ளது. இதனையடுத்து அந்த நபரை பிடித்தது விசாரித்த கடை உரிமையாளர்கள் நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற முதியவரை கைது செய்தனர்.

Counterfeit notes worth Rs 45 lakh seized in Chennai

முதியவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தான் முன்னாள் ராணுவ வீரர் என்றும் தனது பெயர் அண்ணாமலை எனவும் தெரிவித்துள்ளார். மேற்கொண்ட விசாரணையில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் சுப்பிரமணியன்( வயது 62 )என்பவரை போலீசார் கைது செய்தனர். சுப்ரமணியனின் வீட்டிலிருந்து ஒரு கட்டிங் மெஷின் ,ஒரு கவுண்டிங் மெஷின், 45 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கோடீஸ்வரன் என்ற பெயரில் பிரமாண்டமாக விளம்பர படம் எடுக்க இருப்பதாகவும்,

Counterfeit notes worth Rs 45 lakh seized in Chennai

அதற்கு கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் அடித்து தர வேண்டும் எனக்கூறி கடந்த மாதம் வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள விகே.ஆர் பிரஸ்ஸில் 90 கட்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து வடபழனியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் நிறுவனத்திற்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் கள்ள நோட்டு அச்சடித்த கொடுத்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios