உல்லாசமாக இருக்கவே ஒரு காட்டேஜ் கட்டி விட்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? வீங்கும் இல்ல அது நம்ம கோயமுத்தூரில் தான்! கோவை பீளமேட்டில் இப்படியான காட்டேஜ் கட்டப் பட்டிருக்கிறது. அதாவது கல்யாணம் ஆகாத பெண்கள், ஆண்களோடு சேர்ந்து வாழ இப்படிப்பட்ட வீடுகளை வாடகைக்கு தனியார் நிறுவனம் ஒன்று கட்டி விட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

இதனைப் பார்க்க காட்டேஜ் போலவே இருக்கிறதாம், இங்கு கல்யாணமாகாத ஆண் பெண், தாங்கிக்கொள்ளம் என சொல்லப்படுவதால், இங்கு எந்நேரமும் இளசுகள் கூட்டம் அலை மோதுகிறதாம். 

இதுகுறித்து, கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில்; கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தனியார் நிறுவனம்  வீடுகளை வாடகைக்கு எடுத்து காட்டேஜ் போன்று  நடத்தி வருகிறது. இங்கு கல்யாணம் ஆகாத ஆணும், பெண்ணும் சேர்ந்து தங்கி கொள்ளலாம் என்று இணையத்திலும் விளம்பரப்படுத்தி வருகிறது. இதனால் குடியிருப்பில் எந்நேரமும் இளம் பெண்கள், ஆண்களின் கூட்டம் அதிகமாக  காணப்படுகிறது. 

இப்படி கல்யாணமாகாத ஆணும் பெண்ணும் சேர்ந்து தங்கி கொள்ளலாம் என்ற அறிவிப்பின் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும். எனவே இது போன்ற காட்டேஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில்  பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்.  ஏற்கனவே பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடந்ததற்கு முக்கிய காரணம் இதுபோன்ற அனுமதி இல்லாத பண்ணை வீடுகள், காட்டேஜ் தான். இப்படியான பாலியல் குறித்த சம்பவங்கள் கோவையிலும் தொடராமல் தடுக்க மாவட்ட கலெக்டர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.