தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டியை சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் . கூலித் தொழிலாளியான இவர், தனது  வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வந்த கோச்சடையான் என்பவரது மாற்றுத்திறனாளி மகளை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தனியாக இருக்கும் சமயத்தில் பலமுறை கற்பழித்துள்ளார்.

பெற்றோர்கள் வேலைக்கு சென்றிருந்தபோது,  தனியாக இருந்த அந்தப் பெண்ணை மிரட்டி கற்பழித்துள்ளார். இது கோச்சடையான் மற்றும் அவரது உறவினர்களுக்கு தெரிய வரவே ரத்தினவேல் பாண்டியனை கண்டித்தனர்.

பின்னர் ஊர் பெரியவர்கள் மத்தியில் சமரசம் பேசி ரத்தினவேல்பாண்டியனை எச்சரித்து விட்டு விட்டனர்.  ஆனால் சில மாதங்களிலேயே கோச்சடையான் மகள் இறந்து விட்டார்.

அப்போது முதல் ரத்தினவேல்பாண்டியனை எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என்று  கோச்சடையான் துடித்துக் கொண்டிருந்தார்.


இந்நிலையில் இன்று காலை ரத்தினவேல்பாண்டியன் தோட்டத்திற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கோச்சடையான் மற்றும் 2 பேர் அவரை அரிவாளால் வெட்ட முயன்றனர். உயிருக்கு பயந்து ரத்தினவேல்பாண்டியன் ஓடினார். இருந்தபோதும் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றனர்.
இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.