பாண்டிச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை..!
 எப்படி நடந்தது இந்த கொலை..!
பாண்டிச்சேரியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சாம்ப சிவம் . இவர் கிருமாம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தன்னுடை தங்கையின் திருமணத்திற்காக நண்பர்கள் உறவினர்களுக்கு திருமண பத்திரிக்கை வைக்க காரில் சென்ற போது திடீரென குறுக்கிட்டு மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள். அந்த குண்டு வீச்சில் கார் தீப்பற்றி எரிந்திருக்கிறது. உடனே சாம்பசிவம் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைதடுமாறிய போது மர்ம கும்பல் சாம்பசிவத்தை சாரமாரிய வெட்டி வீசியது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார் சாம்பசிவம்.
பாண்டிச்சேரியில் நாட்டுவெடிகுண்டு வீசி கொலை செய்யும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்  இந்த கலாச்சாரத்தை பாண்டிச்சேரி காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

T.Balamurukan