பீகாரில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகேஷ் குமார் யாதவ் என்பவர் இன்று அதிகாலை மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . சமூக வலைத்தளத்தில் அம்மாநில சட்ட ஒழுங்கு குறித்து அவர் விமர்சித்து வந்த நிலையில் இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .  தென்னிந்தியாவை காட்டிலும்  வடமாநில அரசியல் என்பது வன்முறைகள் நிறைந்தவை ஆகும்.   பழிக்குப் பழி தீர்ப்பது ஆளையே அடித்து தூக்குவது   என்பதெல்லாம் அங்கு சர்வ சாதாரணம் என்ற வகையில் இன்று அதிகாலை  பீகாரில்  காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகேஷ் குமார் யாதவ் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

வழக்கம்போல அதிகாலை  உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுகொண்டிருந்தார் ராகேஷ் குமார் யாதவ் ,  அவர் உடற்பயிற்சி கூடத்தை நெருங்கியபோது மோட்டார் பைக்குகளில் வந்த மர்ம கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக அவரை நோக்கி  சரமாரியாக  சுட்டது இதில் அவரது மார்பு ,  தோல்பட்டை முதுகு என பல இடங்களில் குண்டு பாய்ந்து  சம்பவ இடத்திலேயே ரத்த  வெள்ளத்தில்  சரிந்து உயிரிழந்தார் ராகேஷ் குமார் யாதவ்,  அவர் சரிந்ததும்  அங்கு வந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்தது .  அதிகாலையில் துப்பாக்கி  சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது ராகேஸ் குமார் சடலமாக கிடந்தார்.  இதனையடுத்து பொதுமக்கள் போலீசார் கொடுத்த தகவலையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜேஷ்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார்,  வந்தவர்கள் யார் ,  எதற்காக சுட்டனர்  என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அவரது ஆதரவாளர்கள் பீகார் மாநிலத்தில் வைஷாலியில்   ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்தும்,  அடிக்கடி நடந்து வரும் குற்ற சம்பவங்கள் குறித்தும் சமூக வலைதளத்தில்   மிகக் கடுமையாக விமர்சித்து வந்ததுடன் ,  இதை அரசும் காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது என ராகேஷ் குமார் சாடிய  நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என  அவர்கள் தெரிவித்துள்ளனர் .