அப்பா, சித்தப்பா, மாமன், மச்சான் உறவினர்கள் யாரவது சின்ன வார்டு செயலாளர் பதவியில் இருந்தால் போதும், அவர்களுடைய பதவியை வைத்துக்கொண்டு செய்யும் அட்டூழியங்கள், அவர்கள் செய்யும் தவறிலிருந்து தப்பிக்கின்றனர் வாரிசுகள் மற்றும் உறவினர்கள். அப்படித்தான் தனது அப்பாவின் பதவியை வைத்து மகன் போதையில் செம்ம ரகளை செய்த சம்பவம் நடந்துள்ளது. 

சென்னையில் நேற்று இரவு அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் பெயர் மைனர் சாமியின் மகன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு தனது காதலியுடன் பைக்கில் வந்துள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவரை சோதனையிட்டதில் அவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு செம மைப்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போலீசாரும் நீங்க ஓவரா பேசுறீங்க என வார்னிங் செய்துள்ளனர். ஆனாலும் அந்த பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஓவராக இறுமாப்பாக பேசியுள்ளார்.

அவரது வாகனத்தில் போஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, இதைப்பார்த்த போலீசார் விசாரிக்கையில் நான் இன்ஸ்பெக்டர் மகன் என இறுமாப்பாக  பேசியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்களை இந்த காட்சியை வீடியோ எடுத்து இந்த சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவியது. 

இதையடுத்து, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகனை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து ஆர்.ஐ., புகாரின் பேரில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது, கொலை முயற்சி என 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் பெயர் மைனர் சாமி, ஒரு நல்ல மனிதர், இவருக்கு பிறந்த மகன் அவருடைய பதவியை கலங்கப்படுத்தி உள்ளது என்பது வேதனையான ஒன்றுதான். யார் தவறு செய்து இருந்தாலும் காவலர்கள் உட்பட கடும் நடவடிக்கை எடுத்து வரும் மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்க்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.

"