திருச்சி அருகே இருக்கும் பீமநகரைச் சேர்ந்தவர் ரம்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 21 வயது இளம்பெண்ணான இவர் அங்கிருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டின் எதிரே இருக்கும் வாலிபருக்கும் ரம்யாவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது. காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவரவே, படிப்பு முடிந்த பிறகு இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகே இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாணவியை அழைத்து சென்றனர். அங்கு ரம்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதுடன் வயிற்றில் சிசு இறந்த நிலையில் இருப்பதை கண்டறிந்து உடனடியாக அதை அகற்றினர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் ரம்யாவிடம் விசாரித்தனர். அதில் எதிர் வீட்டில் இருக்கும் காதலுடன் தனிமையில் இருந்ததை ரம்யா கூறியுள்ளார். தற்போது அந்த வாலிபர் வேலைக்காக வெளிநாட்டில் தங்கி உள்ளார்.

இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் சார்பாக கல்லூரி மாணவி ஒருவர் கர்ப்பமாக இருக்கும் தகவலை காவல்துறையில் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் மகளிர் காவலர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபர், தானே அவரை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தார். இதையடுத்து முதற்கட்ட விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோர தாண்டவமாடும் கொடூர கொரோனா..! ஒரே நாளில் 242 உயிர்களை பறித்தது..!