திருமணம் ஆசைக்காட்டி கல்லூரி மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் 17 வயது மாணவியும் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சிவபிரகாஷ் (22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். திருமண ஆசைவார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். 

இதனையடுத்து, கல்லூரி மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். பின்னர், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவபிரகாஷ் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் சிவபிரகாஷத்தை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.