ஸ்பெஷல் கிளாஸ் என்று கூறி மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த 19 வயது பெண். இவர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் திருவண்ணாமலை கூட்டான்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(38) என்பவர் உதவி பேராசிரியர் பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவியிடம் கடந்த சில மாதங்களாக தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் நேற்று முன்தினம் சிறப்பு வகுப்பு இருப்பதாக மாணவியை தனியாக கல்லூரிக்கு அழைத்து வகுப்பறையில் யாரும் இல்லாதபோது மாணவியிடம் ரமேஷ் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது அவரிடம் இருந்து தப்பிய மாணவி வீட்டிற்கு சென்று கதறியபடி பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். 

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவிப்பேராசிரியர் ரமேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.