திருவாரூர் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில்  கீழ் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள சித்தன்வாழுர் மேலகுளக்கொடி கிராமத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும், அதே பகுதியை சேர்ந்த சரவணன் (35) என்பவரும் கடந்த 2 ஆண்டாக பழகி வந்தனர்.

இந்நிலையில், மாணவியை, சரவணன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதில், அவர் கர்ப்பமாகி அந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மாணவி சரவணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். 

இதுகுறித்து மாணவி நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்