கர்நாடக மாநிலம் மைசூரில் சாதி மாறி இளைஞனை காதலித்து வந்த பெண்ணை அவரின் தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் மைசூரில் சாதி மாறி இளைஞனை காதலித்து வந்த பெண்ணை அவரின் தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். பெரும்பாலான கொலை, தற்கொலைகள் காதல் அல்லது கள்ளக் காதலை மையமாகக் கொண்டே அரங்கேறி வருகிறது. அதிலும் காதல் விவகாரத்தில் சாதியைக் காரணம் காட்டி கொலை அல்லது ஆணவ கொலைகள் அரங்கேறி வருகிறது. இவற்றை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தோம் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக தலித் சமுதாய இளைஞர்களை காதலிக்கும் பெண்கள் அதிக அளவில் ஆணவக்கொலைக்கு இறையாகி வருகின்றனர்.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் தலித் இளைஞரை காதலித்த பெண் அவரின் தந்தையால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரு பெரியபட்டின தாலுகாவிலுள்ள ககுண்டி கிராமத்தில் சேர்ந்தவர்17 மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு இளைஞருடன் அந்தப் பெண் காதல் வயப்பட்டார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலித்து வந்தனர். இது அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிந்தது. தலித் சமுதாயத்தைச் சார்ந்த இளைஞருடன் அந்தப் பெண் காதலித்து வந்ததால், அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணை கண்டித்தனர்.

அந்த இளைஞருடனான காதலை கைவிடும்படி வற்புறுத்தி வந்தனர். ஆனால் அந்த மாணவி பெற்றோர்களின் வார்த்தைக்கு செவிசாய் க்கவில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் தந்தை அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தார். பின்னர் மகளின் சடலத்தை வயலுக்கு கொண்டு சென்று புதைத்தார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோரை மைசூர் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மைசூர் எஸ்.பி சேத்தன், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார், அந்த மாணவி வொக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர் என்றும், அந்த இளைஞன் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார்.