இளம்பெண் திருமண செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலன் கல்லூரி மாணவியுடன் பழகிய அனைத்து விதமாக போட்டோக்களை முகநூலில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெரம்பலூரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் முகநூல் மூலமாக பாலமுருகன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடையில் இருவருக்கும் இடையே காதலமாக மாறியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலமுருகன் மாணவியை தனிமையில் சந்தித்துள்ளார். அப்போது, பேசும் போதே மாணவியை பாலியல் சீண்டல் செயலில் ஈடுபட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி பாலமுருகனை கடுமையாக எச்சரித்துவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து, பாலமுருகன் பலமுறை போனில் தொடர்பு கொண்ட போதும் தொடர்பை துண்டித்து விட்டார். 

இதனால், ஆத்திரமடைந்த பாலமுருகன் மாணவியிடம் எடுத்துக்கொண்ட போட்டோக்களை முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி பாலமுருகனை செல்போனில் தொடர்பு கொண்டு எச்சரித்தார். ஆனால் அவர் என்னை திருமணம் செய்யவில்லை என்றால் கையில் இருக்கும் போட்டோக்களை முகநூலில் மீண்டும் வெளியிடுவேன் என்று மிரட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக நடந்தவற்றை பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார்.

 

இதனையடுத்து பாலமுருகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலமுருகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.