தன்னுடன் படிக்கும் கல்லூரி தோழனை  பெண்ணாக மாற்றி திருமணம் செய்து உல்லாசம் அனுபவித்ததுடன் பின்னர் சேர்ந்துவாழ முடியாது என  மோசடி செய்ததாக சக கல்லூரி மாணவன் மீது புகார் எழுந்துள்ளது .  தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்,  அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து  வருகிறார் நிலையில் அதே வகுப்பில் பயிலும்  அபிஷேக் என்ற மாணவனுக்கும் சந்தோஷூக்கும் இடையே நட்பு ஏற்பட்டது ,  இந்நிலையில்  அபிஷேக்கின் நடை உடை பாவனையில்  பெண்மை இருப்பதை கண்ட  சந்தோஷுக்கு அபிஷேக் மீது  ஈர்ப்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.  

கல்லூரி படிப்பு நிறைவடைந்த நிலையில் அபிஷேக்கை  விட்டு பிரிய மனம் இல்லாத சந்தோஷ் அபிஷேக்குடன் இணைந்து வாழ முடிவு செய்து  அதை அபிஷேக்கிடம் தெரிவித்துள்ளார் அதே வேலையில்  திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒரே வீட்டில் வாழலாம் எனவும் அபிஷேக்கை  சந்தோஷம் வற்புறுத்தி வந்துள்ளார் .  ஆனால் வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் பெற்றோர்களை கவனிக்க வேண்டும் எனக்கூறி அபிஷேக் சந்தோஷை ஆரம்பத்தில் புறக்கணித்துள்ளார் . ஆனால் சில தினங்களில்  சந்தோஷ் பேச்சை ஏற்றுக் கொண்ட அபிஷேக் ,  சந்தோஷூக்காக தன்  வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.   இந்நிலையில் முழு பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என சந்தோஷ் அபிஷேக்கை வற்புறுத்தி வந்தள்ளார்.  அத்துடன் நீ தான் என் வாழ்க்கை,  என் எதிர்காலம் என சந்தோஷ் சினிமா பாணியில் டயலாக் பேசுவதைக் கேட்ட அபிஷேக் மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து முழு பெண்ணாக மாறினார் அத்துடன் தன் பெயரையும் அர்சனா என மாற்றிக்கொண்டார்.   

அதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.   ஆனால் திருமணம் செய்த சில நாட்களிலேயே அபிஷேக சந்தோஷ் அடித்து துன்புறுத்தினார்.  அத்துடன் இனி உன்னுடன் வாழ முடியாது என கூறி தகராறில் ஈடுபட்டு  வந்துள்ளார் .ஒரு கட்டத்தில்  அபிஷேக்கை  சந்தோஷ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் .  இதனால் நடுத்தெருவுக்கு வந்த அபிஷேக் ஆணாக இருந்த  தன்னை பெண்ணாக மாற வைத்து தன்னுடன் உல்லாசத்தை அனுபவித்துவிட்டு இப்போது வாழமுடியாது என  சந்தோஷ் என்னை  நடுத்தெருவில் நிறுத்தி விட்டார் எனக் கூறி காவல் நிலையத்திலும் திருநங்கைகள் சங்கத்திடம் அர்ச்சனா என்ற அபிஷேக் புகார்  தெரிவித்துள்ளார் இச்சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்பட்டுள்ள