மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, இன்று  நீதிமன்ற விசாரணையின் போது, மயங்கி விழுந்த சம்பவம்  அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, இவர் அங்குள்ள மாணவிகளை சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு விருந்தாக்க முயற்சி செய்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.  அதற்கான அவர் மாணவிகளிடம் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் ஆதாரமாக வெளியாகி தமிழகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை விசாரித்த போலீசார் அதில் உண்மை இருப்பதை அறிந்து, நிம்ரலாவை  கைது செய்து சிறையிலடைத்தனர்.  பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ள அவர், வழக்கிற்காக நீதிமன்றத்தில்ஆஜராகி வருகிறார். 

இந் நிலையில் வழக்கு விசாரணைக்காக இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.அப்போது அவர்கள் மீது என்று  charge sheet எனப்படும் குற்றச்சாட்டு பதிவு நடைபெற்றது , அப்போது  நீதிபதி பரிமளா,  கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதுடன், மூவரும் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டீர்களா என்று கேட்டார்,

அதற்கு மூவரும் ஒரு மித்த குரலில் , இல்லை என்று கூறியதுடன், இது தங்கள்மீது புனையப்பட்ட பெய் வழக்கு என்று பதில் கூறினர். அப்போதும் பேசிய நீர்மலா தேவி,  "நான் மாணவிகளை குழந்தைகளாகத்தான் பாவித்தேனை தவிர, வேறு எந்த தவறும் செய்யவில்லை''    என நீதிபதி முன் விளக்கமளித்தார் பின் அதே இடத்தில் மயங்கியும் அவர் விழுந்தார் , உடனே பாதுகாப்புக்காக இருந்த போலீசார் நிர்மலா தேவியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். குற்றச்சாட்டு பதிவின் போது நிர்மலா  மயங்கி விழுந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.