காதலன் கர்ப்பமாக்கி விட்டு கல்யாணம் செய்ய மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் அடுத்த வெள்ளேரிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுவேதா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வந்தார். 

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தினேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தினேஷ் நந்தினியை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை அவருடன் தனிமையில் உறவு வைத்துள்ளார். இதன் விளைவாக அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். தான் கர்ப்பமடைந்துள்ளதாகவும் உடனே கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என சுவேதா கூறியுள்ளார்.  கருவைக் கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

காதலனின் பேச்சைக் கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் கருவை கலைத்துள்ளார். கருவை கலைத்த பின் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நந்தினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெட் ரூமில் ஃ பேனில் புடவையால் தூக்கில் தொங்கினார். கடைக்கு சென்ற அவரது தாயார் சுமதி வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடந்தார். அலறித்துடித்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனே விரைந்து வந்த போலீஸ், நந்தினியை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மாணவி நந்தினி இறந்து விட்டதாக கூறினர். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், மணவாள நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.