காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற பெண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதற கதற கற்பழித்த  அதிர்ச்சி சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணை  வீட்டுக்கு வரவழைத்து அவரை கற்பழித்ததாக  தகவல் வெளியாகியுள்ளது .  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதைக்  கட்டுப்படுத்த அரசு காவல் துறை உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வரும் நிலையில் அந்த காவல்துறையை சேர்ந்தவரே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது பெண்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை மேற்கொள்ளும் குற்றவாளிகளை தண்டிக்க ஆந்திராவில்   திஷா சட்டத்தை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி  அதிரடியாக அறிவித்துள்ளார் ,   ஆனாலும் அங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை .  கடந்த சில நாட்களுக்கு முன்னர்  காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்ற பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது அருண்டெல் பேட்டை என்ற காவல் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்த  இளம்பெண் ஒருவர் தன்னை காதலிப்பது போல் நடித்து இளைஞர் ஒருவர் ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்துள்ளார், அப்போது அங்கிருந்த  சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன்  அவரின் புகாரை பதிவு செய்வதற்கு பதிலாக விசாரணைக்காக தன் வீட்டுக்கு வருமாறு அந்தப் பெண்ணை அழைத்துள்ளார். 

அதேபோல் அந்த காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ராமன் என்பவர் விசாரணைக்காக அந்தப் பெண்ணின் தாயை லாட்ஜுக்கு வருமாறு அழைத்துள்ளார் , இந் நிலையில் அதை நம்பி சப் இன்ஸ்பெக்டரின் வீட்டுக்கு  சென்றுள்ளார் அந்த இளம் பெண்,  அப்போது தயாராக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்தப்  பெண்ணுக்கு ஆறுதல் கூறுவது போல நடித்து  அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது .  இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயார் தங்களிடம் தவறாக நடந்து கொண்ட சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த காவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.