கோவையில் எஸ்.என்.எஸ். கல்லூரி குழும தாளாளர், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மை காலமாக கல்வி நிலையங்களில் பயிலும் மாணவிகளுக்கு, பெண் ஊழியர்களுக்கும் பாலியல் தொந்தரவு, பேராசிரியர்களாலும், நிர்வாகத்தின் தரப்பில் இருந்து அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குகள், நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள என்.எஸ்.என். கல்லூரியின் தாளாளர் சுப்பிரமணியம், அங்கு பணிபுரியும் இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், தாளாளர் சுப்பிரமணியம், இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த பெண் கடந்த 2 ஆண்டுகளாக அந்த கல்லூரியில், இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணுக்கு, தாளாளர் சுப்பிரமணியம் அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். அலுவல் நிமித்தமாக தனது அறைக்கு அழைத்து அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பாலியல் தொந்தரவுக்கு ஆளான இளம் பெண்கள், தாளாளரின் மகனும் கல்லூரியின் தலைமை நிர்வாகி நளனிடம் பல்வேறு புகார்களை அளித்து வந்துள்ளனர்.

ஆனால், கல்லூரி நிர்வாகத்தால் பாலியல் புகார் கொடுக்கும் இளம் பெண்கள் மிரட்டப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இதுபோன்ற விஷயம் சாதாரணமானது என்றும், எனவே பொறுத்துக் கொள்ளும்படியும் புகார் கூறும் பெண்களிடம் கூறியுள்ளார். மேலும், புகார் கூறிய பெண்களிடம், சமாதான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. 

இந்த நிலையில்தான், பாதிக்கப்பட்ட இளம் பெண், தனது நண்பர்களுடன் சேர்ந்த கோவை, புதியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். ஆனால், புகார் கொடுத்த இளம் பெண் மிரட்டப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் இளம் பெண் வெளியிட்டுள்ளார். வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், கல்லூரி நிர்வாகத்தால் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. தனக்கு கொலை மிரட்டல் வருவது குறித்து அந்த இளம் பெண் போலீசிடம் புகார் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாளாளர் சுப்பிரமணியம், மாணவிகளிடமும் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.