அழகு நிலைய ஊழியர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்த வழக்கு.. மற்றொருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி விகேஎல் நகர் அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் துண்டாக வெட்டப்பட்ட  ஆணின் இடது கை கண்டெடுக்கப்பட்டது. 

coimbatore Beauty salon employee murder case.. goondas act on another criminal

கோவை அழகு நிலைய ஊழியர் துண்டு துண்டாக வெட்டி  கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. 

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி விகேஎல் நகர் அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் துண்டாக வெட்டப்பட்ட  ஆணின் இடது கை கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இவ்வழக்கில் தொடர்புடைய பெண் உட்பட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில்  கொலை செய்யப்பட்டவர் காந்திபுரம் அழகு நிலையத்தில் வேலை பார்த்த பிரபு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளக்காதல் விவகாரத்தில் இவர் கொலை செய்யப்பட்டு  தடயங்களை மறைக்கும் நோக்கில் உடல், தலை மற்றும் ஒரு கை பிளாஸ்டிக் கவரில் கட்டி துடியலூர் அருகே உள்ள கிணற்றில் வீசியது தெரியவந்தது.  இதனையடுத்து, வெவ்வேறு இடத்தில் வீசப்பட்ட அவரது உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. 

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய அமுல்திவாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு குற்றவாளியான கார்த்திக் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணண் பரிந்துரை செய்தார்.  இந்த பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின் கீழ் கொலை வழக்கு குற்றவாளியான  கார்த்திக்(27)-ஐ குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios