Asianet News TamilAsianet News Tamil

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு..! பயங்கரவாதி வாட்ஸ் அப் Dp-யாக கோவை ஆதியோகி சிலை.?

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் காவல்துறை வசமுள்ள ஷாரிக் பயன்படுத்திய வாட்ஸ்அப் எண்ணில் கோவையின் ஆதி யோகி சிலையின் புகைப்படத்தை DP ஆக வைத்திருந்ததாக  புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore Adiyogi statue as a terrorist WhatsApp DP has created a stir
Author
First Published Nov 22, 2022, 2:28 PM IST

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூர் ஆட்டோவில் வெடித்த குக்கர் வெடிகுண்டு மீண்டும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த இரு நபர்களில் ஒருவரான ஷாரிக் என்பவர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்துள்ளது.  ஷாரிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் தமிழகத்தின் சில பகுதிகளுக்கும் கேரளாவிற்கும் சென்று வந்தது இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஷாரிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக பெண் தலைவருக்கு கொலை மிரட்டல்..! கட்சி நிகழ்ச்சியில் சூர்யா சிவா பங்கேற்க தடை..! உத்தரவிட்ட அண்ணாமலை

Coimbatore Adiyogi statue as a terrorist WhatsApp DP has created a stir

போலியான பெயரில் ஷாரிக்

மேலும் ஷாரிக் குக்கர் குண்டோடு எடுத்த போட்டோவும் வெளியாகி சமூக வலை தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.  மங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் போலியான ஆதார் எண்கள் மற்றும் போலியான பெயர்களில் அவர் விடுதிகளில் தங்குவதும் மொபைல் எண்களை பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஷாரிக் தான் பயன்படுத்திய செல்போனின் பெயரை பிரேம் ராஜ் என்ற பெயரில் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. மேலும் தனியார் விடுதியில்  கௌரி அருண்குமார் என்ற பெயரில் கோவையில் தங்கி இருந்ததையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர். 

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு..! சதி திட்டத்தின் பின்னனி என்ன..? ஷாரீக்கிடம் என்ஐஏ போலீசார் விசாரணை..?

Coimbatore Adiyogi statue as a terrorist WhatsApp DP has created a stir

வாட்ஸ் அப் DP ஆதியோகி சிலை.?

இதனிடையே ஷாரிக் பயன்படுத்திய வாட்ஸ் அப் எண்ணில் கோவையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான  ஈஷாவின் ஆதியோகி சிலையை முகப்பு பக்க DPஆக வைத்திருந்ததாக புகைப்படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஷாரிக் கோவை வந்தபோது ஈஷா சென்று வந்தாரா?  அவருடன் வேறு யாரும் அங்கு சென்று வந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

கூட்டணி கட்சி தலைவர்கள் மீது விமர்சனம்..! பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை

Follow Us:
Download App:
  • android
  • ios