விரைவில் வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. 

அதன்படி, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் களத்தில் நிற்கின்றனர். 

விரைவில் தேர்தல் வரவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேலூர் மக்களவை தேர்தலை ஒட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. அதுவும் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், குடிமகன்களுக்கு சற்று அதிர்ச்சி தரும் விஷயம் என்றே கூறலாம்.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, வரும் ஆகஸ்ட் 3, 4, 5 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும். வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.