மும்பையில் உள்ள கோவான்டி, சிவாஜி நகரை சேர்ந்த ஆயிஷா தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார். ஆயிஷா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தாய், மகனுடன் வசித்து வந்தார். 

இவரிடம் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் டியூசன் படித்து வந்தான்.  இந்நிலையில், மாணவனின் தாய், ஆசிரியை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவரிடம் கடனாக காசு கேட்டுள்ளார். கடன் தர மறுத்த ஆயிஷா மாணவனின் தாயை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதைப் பார்த்த அந்த மாணவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அதன் பிறகு மாணவனும், தாயும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்திற்கு பின் பின் மாணவன் கத்தியுடன் ஆயிஷா வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது வீட்டின் குளியலறையில் முகம் கழுவிக்கொண்டிருந்த ஆயிஷாவை சரமாரியாக கத்தியால் குத்தினான். இதில் வயிற்றில் பலத்த காயம் அடைந்த ஆயிஷா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். உயிருக்கு போராடிய ஆயிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையை குத்திக்கொன்ற 9 வயது மாணவனை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் , டீச்சரிடம் தனது தாய் பணம் கேட்டார் ஆனா, அதற்கு டீச்சர் கொடுக்க மறுத்து திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்து அவரை குத்திக் கொன்றதாக தெரிவித்தான். அதோடு இல்லை மேலும் அவன் சொன்ன இரண்டு காரணங்கள் போலீசாரையே தலை சூத்தை வைத்துவிட்டது.  அவன் தனது வீட்டு அருகே வசிப்பவர்களின் முன்பு டீச்சர் தன்னை அடித்ததாகவும் அதனால் கோபத்தில் கத்தியால் குத்தியதாகவும் கூறியுள்ளான்.

அடுத்ததாகா தனது  தந்தையிடம் கூறும் போது சிலர் ஆசிரியையை குத்திக்கொல்ல ரூ.2 ஆயிரம் கொடுத்ததாகவும் அப்படி செய்யவில்லை என்றால் தன்னை ஆற்றில் தூக்கி வீசிவிடுவதாக மிரட்டியதாக கூறியுள்ளான். மாணவனின் இந்த வாக்குமூலங்களால் குழப்பமடைந்த  போலீசார் மேலும் அவனிடம் கொலைக்கான காரணமென்ன என தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.