நான்காம் வகுப்பு மாணவியை 2 ஆசிரியர்கள் சேர்ந்து மாறி மாறி கற்பழித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் டாப்சாஞ்சி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த மாதம் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது உடனடியாக அந்த மாணவியை, மருத்துவமனைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த மாணவியை வகுப்பாசிரியரும், பள்ளியின் துணை முதல்வரும் மாறி மாறி கற்பழித்துள்ளது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. 

சிறுமி பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில நாட்களாக மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறி உள்ளனர். இதையடுத்து பெற்றோர் தீவிரமாக விசாரித்த போது நடந்த சம்பவத்தை சொல்லி மாணவி கூறி கதறி அழுதுள்ளார்.  

பின்னர் இந்த கொடூர சம்பவம் பற்றி கத்ராஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை போலீஸ் பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுகிறது. மாணவியின்மெடிக்கல் ரிப்போர்ட்  அடிப்படையில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.