பழனியில் இருதரப்பினர் இடையே மோதல் போக்கு: காவல் துறை குவிப்பு

பழனி அருகே இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் பிரச்சினை தொடர்பாக வஃபு வாரிய வழக்கறிஞர்கள் ஆய்வு செய்த போது மாற்று சமுதாயத்தினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Clash between two parties in Palani

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். பாலசமுத்திரம் கிராமத்தில் இஸ்லாமியர்கள் அடக்கம் செய்ய அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் இடத்தை அடக்கஸ்தலமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த அடக்க ஸ்தலத்திற்கு அருகில் வசிக்கக்கூடிய மாற்று சமுதாயத்தினர் இஸ்லாமியர்கள் அடக்க ஸ்தலம் என்ற பெயரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக தகராறில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. 

அடக்கஸ்தலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வஃபு வாரிய வழக்கறிஞர்கள் அடக்கஸ்தலத்தை பார்வையிட்டு அளவீடு செய்ய வருகை தந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் அப்பகுதியில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

சம்பவ இடத்தில் பழனி டிஎஸ்பி சிவசக்தி தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பொதுமக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் அளவீடு செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து வஃபு வாரிய வழக்கறிஞர்கள் அடக்கஸ்தலம் அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு சென்றனர். பால சமுத்திரத்தில் அடக்கஸ்தலம் தொடர்பான பிரச்சினையில் இரு தரப்பினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios