மகளுடன் வாழ மறுத்ததுடன் அன்றாடம் குடித்துவிட்டுவந்து  தகராறில் ஈடுபட்டு வந்த மருமகனை மாமனார் பிளேடால் அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் ,  இவரது மனைவி கலைவாணி இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் மூத்த மகள் பெயர் சந்தியா இவர் அதே பகுதியில்  சென்ட்ரிங் வேலை செய்து வந்த காந்திராஜன் என்பவரை காதலித்துவந்தார் இதனால் பெற்றோர்களின் சம்மதத்துடன்  இருவருக்கும் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. 

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் ஆனால் திருமணம் ஆனது முதல் காந்திராஜன் அன்றாடம் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது .  இந்நிலையில் கடந்த வாரம் காந்திராஜன்  வீட்டிற்கு குடித்துவிட்டு வந்தது மனைவியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார் .  இதனால் கோபித்துக் கொண்டு மனைவி பக்கத்து தெருவில் உள்ள  தாய் வீட்டிற்கு சென்று விட்டார் ,  இதனையடுத்து மகளை சமாதானம் செய்து கணவனுடன் சேர்ந்து வாழ வைக்க பிரபாகர் கலைவாணி தம்பதியினர் ,  காந்திராஜன் வீட்டிற்கு மகளை  அழைத்து வந்துள்ளனர் .  அப்போது  பிரபாகரனுக்கும் மருமகன் காந்திராஜனுக்கும்  இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது .  இதில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையேகைகலப்பு ஏற்பட்டது .  

அதில் ஆத்திரமடைந்த  பிரபாகர் ,  பொண்டாட்டியை  வைத்து முறையா குடும்பம் நடத்த துப்பில்ல  என்னை அடிக்க வருகிறாயா.?  என கேட்டு,  தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் மருமகன் காந்திராஜனை சரமாரியாக அறுத்துத் தள்ளினார்,  இதில் கழுத்து முகம் என பலிடங்களில்  அறுபட்டு படுகாயமடைந்தார் காந்திராஜன் ,  பாலம்பாலமாக அறுபட்டதில்  ரத்தவெள்ளத்தில் மயங்கினார் காந்திராஜன்,   உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர் .  இச்சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் பிரபாகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.  மாமனார் மருமகனை பிளேடால் அறுத்துதள்ளியுள்ள  இந்த  சம்பவம்  மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.