சிறுவர், சிறுமியர்களின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த குற்றச்சாட்டில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற வழக்கில் இவர் இந்தியாவிலேயே முதன்முறையாக கைது செய்யப்படும் நபர். நிலவன், ஆதவன் என்ற பெயர் கொண்ட கணக்கு மூலம் வீடியோக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்து வந்த அவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.  

பின்னர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜை கைது செய்த பாலக்கரை போலீஸார், அவரிடம் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜுடன் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பரப்பியவர்கள் லிஸ்டில் 150 பேர் இருப்பதை காவல்துறையினர் அறிந்து அதிர்ச்சியாகி உள்ளனர். விரைவில் அவர்களும் கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.