ப்ரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள  ஸ்டார் ஓட்டலில் கடந்த ஜனவரி 15ம் தேதி நடைபெற்ற இரவு நேர  விருந்து நிகழ்ச்சியின் போது 24 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அந்த பெண்ணை  பலாத்காரம் செய்தவர் யார் என்றே தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் சிசிடிவியில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்திய விசாரணையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் கிரிஸ் பிரவுன் அவரது பாதுகாவலருடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி போலீசார் அவர்களை கைது செய்தனர். ப்ரான்ஸ் நாட்டு சட்ட விதிகளின் படி அவருக்கு 16 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.