பெங்களூருவில் 10 வயது சிறுமியை நைசாக கூட்டிச்சென்று பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

பெங்களூருவியை அடுத்த தேவனஹள்ளி என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய தனது மகளை பார்ப்பதற்காக நேற்று 62 வயது பாதிரியார் ஒருவர் சென்றுள்ளார். அப்பொது அந்த தெருவில் வசித்து வரக்கூடிய 10 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். இதனையடுத்த, அந்த சிறுமியிடம்  நைசாக பேசி மகள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.  இதன் பிறகு சிறுமியை வலுக்கட்டாய மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

 

ஆனால், பெற்றோர் சிறுமியை காணவில்லை என்பதால் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். பின்னர்,  பாதிரியார் ஒருவர் சிறுமியை அழைத்து சென்றதாக தெருவோரத்தில் பூ விற்கும் பெண் ஒருவர் கூறியுள்ளார். உடனே  பெற்றோர் அங்கு செல்ல அச்சிறுமியும் அழுதுகொண்டு வெளியில் வந்துள்ளார். அழுதபடியே நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிரியாரை போக்சோவில் கைது செய்துள்ளனர்.