ஆசைவார்த்தை கூறி 2 நாட்களாக ஆசைத்தீர உல்லாசம்! வசமாக சிக்கிய தொழிலாளி! ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்.!
கோவை மாவட்டம் அங்களக் குறிச்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழியாரை சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணன் ( 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் அடிக்கடி மாணவியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
ஆசைவார்த்தை கூறி சிறுமியை கட்டாயத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் அங்களக் குறிச்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழியாரை சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணன் ( 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் அடிக்கடி மாணவியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நைசாக பேசி வெளியே அழைத்து சென்றுள்ளார். பின்னர், உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமியை 2 நாட்களாக கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி மாயமானது குறித்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமி கிருஷ்ணனுடன் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். இதனையடுத்து, கிருஷ்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.