விழுப்புரம் அருகே கள்ளக்காதலி மகளை மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள திருவக்கரையை சேர்ந்தவர் சந்திரமூர்த்தி ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் கற்பகம். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். எனவே கற்பகம் தனது 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது கற்பகத்துக்கும், சந்திரமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

அப்போது கற்பகத்தின் மகள் மீது சந்திரமூர்த்திக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவி வீட்டில் இருந்தார். அப்போது கற்பகம் வேலைக்கு சென்றதை சரியாக பயன்படுத்திக் கொண்ட  சந்திரமூர்த்தி மாணவியை மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், மாணவிக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே கற்பகம் தனது மகளை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது பரிசோதனை செய்த மருந்துவர்கள் மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால், தாய்  கற்பகம் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக மாணவியிடம் விசாரித்த போது நடந்தவற்றை கூறி கதறிய அழுதுள்ளார். இதனையடுத்து, கற்பகம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் சந்திரமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.