உத்தரபிரதேசத்தில் 12 வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதே மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் முதல்வராக இருந்து வருகிறார். ஆனால், இந்த மாநிலத்தில் பெண் மீதான குற்றச்செயல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. 

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமி தங்களுக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடல் என்ற ரவுடி சிறுமியை கடத்தி சென்றுள்ளார். பின்னர் விவசாய நிலத்தில் வைத்தே சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, வெறி தீராததால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்திய போலீசார் ரவுடி அடல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், இவர் மீது பல்வேறு வழக்குககள் நிலுவையில் உள்ளதை அடுத்து அவரை சிறையில் அடைக்கப்பட்டார். 12 வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.