சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகஉள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர். 

சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர், 34 வயது பெண். இவர், கணவர் இறந்த நிலையில் தன் 17 வயது மகள், மகனை படிக்கவைக்க, அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவன ஒப்பந்த முறையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான அசோக்குமார் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருக்கும் போது உல்லாசமாக இருந்து வந்தனர். 

இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில், அசோக்குமாரின் பார்வை, அப்பெண்ணின் 17 வயது மகள் மீது திரும்பியது.  இதனால், ஆத்திரமடைந்த பெண் அசோக்குமாருடன், தன் பழக்கத்தை துண்டித்துக்கொண்டார். இதனிடையே,காரிப்பட்டி அருகே, கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் குமார், 30. இவர் அரசு மருத்துவமனையில், ஊழியர்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். அவரிடம், துப்புரவு பணியாளர் பெண் பணம் வாங்கியிருந்தார். பணத்தை வசூலிக்க, பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த குமார் அவரது மகளா, சிறுமியை எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைத்தார். 

இதற்காக அசோக்குமார் இவருடன் கூட்டு சேர்ந்து கொண்டார். கடந்த, 25ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து  சிறுமியை மிரட்டி இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக தாயிடம் கதறியபடி மகள் கூறியுள்ளார். பின்னர், அவரது தாய், அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில், அசோக்குமாரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான குமாரை தேடி வருகின்றனர்.