என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியாடா பாவி! காவல் நிலையத்தில் கதறிய தாய்! வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி(60). கூலி தொழிலாளி. இவர் பூப்பறிக்க வேலைக்கு வரும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பூப்பறிக்கும் வேலைக்குச் சென்ற சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி(60). கூலி தொழிலாளி. இவர் பூப்பறிக்க வேலைக்கு வரும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமானார். இதனையடுத்து, சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியிடம், அவரது பெற்றோர்கள் கேட்டபோது, அவரை காந்தி பலாத்காரம் செய்ததாக கதறியபடி கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.