ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூரை சேர்ந்த ஒரு பெண் ஆயுத பூஜையையொட்டி பொருட்களை வியாபாரம் செய்வதற்காக தனது 17 வயது மகளுடன் கோவை பூ மார்க்கெட்டுக்கு வந்தார். அங்கு 2 நாட்கள் தங்கி வியாபாரம் செய்தார். திடீரென்று அவருடைய மகளை காணவில்லை. இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், இது தொடர்பா வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், அந்த சிறுமியை, பூ மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்த மணிகண்டன் (26) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்தது. எனவே இந்த வழக்கு கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 

இதையடுத்து, தலைமறைவாக இருந்த மணிகண்டனை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த சிறுமியை மீட்டார். விசாரணையில், மைனர் பெண்ணை ஏமாற்றி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.