பள்ளி மாணவியை மிரட்டி 55 வயது கிழவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த தங்கவேல் ( 55). அரசு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர். இவரது மனைவி அய்யம்மாள் (55). இவர் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவியை தங்கவேல் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும்  கூறியதால் அச்சமடைந்தார். அப்படி இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட மாணவி   தலைமை ஆசிரியையான அய்யம்மாளிடம் சென்று, நடந்ததை கூறியதாக தெரிகிறது. இதை கேட்ட அய்யம்மாள் மாணவியை அடித்து, உதைத்து வெளியில் யாரிடமும் இதை பற்றி சொல்லக்கூடாது எச்சரித்துள்ளார்.

பின்னர், இனிமேல் அந்த பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை என்று மாணவி கூறியதையடுத்து பெற்றோர் அதட்டி கேட்ட போது தங்கவேல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து, தங்கவேலு மற்றும் மாணவி தெரிவித்தும் சம்பவத்தை மறைத்து, அதற்கு உடந்தையாக இருந்ததாக பள்ளி தலைமை ஆசிரியை அய்யம்மாளையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.