வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்துள்ள பெண்ணாடம் கருங்குழி தோப்பை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பேரப்பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி ராஜேந்திரனின் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சிறுமியை அழைத்த ராஜேந்திரன், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், இதுதொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார். ஆனால், சிறுமி அழுதுக்கொண்டே தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
