சீறும் பாம்பை நம்பு... சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற அனுபவ மொழி, தற்போது முறைகேடு வழக்கில் சிபிஐயிடம் கைதாகி உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் பொருந்தும், அந்தளவிற்கு அவரின் மீது ஒரு பெண் அடுக்கிய குற்றச்சாட்டுகள்தான் அவரை சிபிஐ  இந்தளவிற்கு உக்கிரமாக காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து தூக்க காரணம் என்ற புதுத்தகவல் வெளியாகி உள்ளது, சிதம்பரத்திற்கு இந்தளவிற்கு ஆப்பு செதுக்கிய அந்த பெண் யார்...

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களான இந்திராணி முகர்ஜி, மற்றும் பீட்டர் முகர்ஜி என்ற பெண்கள், கடந்த 2007 ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்தின் பங்குகளை விற்க அனுமதி கேட்டு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள அந்நிய  முதலீட்டு  மேம்பாட்டு வாரியத்தில் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களின்  கோரிக்கையை வாரியம் நிராகரித்துவிட்டது.  அதனால் அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தையே அவர்கள் நேரில் சந்தித்தனர், தங்களுக்கு உதவும்படி கோரினர், அப்போது  நீதி அமைச்சர் என்ற தன் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக வாரியத்தில் தடையில்லா சான்றிதழை அவர்களுக்கு சிதம்பரம் பெற்றுக்கொடுத்தார், அதற்காக அவர்களிடத்தில்  கணிசமான கமிஸன் பெற்றார், அதற்கான அனைத்து பேரங்களும் அவரின் மகன் கார்த்திக் சிதம்பரம் நடத்திவந்த நிறுவனத்தின் வாயிலாக நடைபெற்றது என்பதுதான் சிதம்பரத்தின் மீது சிபிஐ வைக்கும்  குற்றச்சாட்டு. இதனிடையில்

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும் கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டனர்,ஆனாலும் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதான முறைகேடு  வழக்கில் அப்ரூவராக மாறி உண்மைகளை சொல்ல தயார் என  இந்திராணி முகர்ஜி சிபிஐயிடம்  ஒப்புக்கொண்டார். எனவே கடந்த ஆண்டு சிபிஐயில் அவர் அளித்த வாக்கு மூலத்தில், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில்  ப.சிதம்பரம் தங்களை நேரில் சந்தித்ததாகவும் அப்போது தன் மகன் கார்த்தியின் தொழில் வளர உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதுடன், நிறுவனத்தின் பங்குகளை விற்க தான் பெற்றுத் தந்த தடையில்லா சான்றிதழ்க்கா ஒரு கணிசமான தொகையை  கேட்டு பெற்றுக்கொண்டார்  என அவர் வாக்கு மூலம்கொடுத்தார். இந்த வாக்குமூலம் தான் தற்போது  சிதம்பரத்தை சிபிஐ அலேக்காக தூக்கி உள்ளே வைப்பதற்கான அடிப்படையும், வழக்கின் முக்கிய ஆதாரமும் என்கின்றனர் சிபிஐயில் உள்ள அதிகாரிகள்

ஏற்கனவே தன் நிறுவனத்தின் மூலம் கார்த்தி ஐஎன்எக்ஸ் மீடியாவின்  3 கோடியே பத்து லட்சம் ரூபாய்க்கு இன்வாயிஸ் தயாரித்து பின்னர் வேறு வகையில் அந்த பணத்தை திருப்பி முறைகேடாக பணபரிவர்த்தனையில் ஈடுபட்டார்  என்ற குற்றத்திற்காக கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்திராணி முகர்ஜி கொடுத்த வலுவான வாக்குமூலத்தின் அடிப்படையில் தனக்கிருத்த அதிகாரத்தின் மூலம் அந்நிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தை ப.சிதம்பரம் தவறாக பயன்பட்டித்தினார் என்ற வழக்கில் தற்போது அவர் சிபிஐயிடம் கைதாயிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. 

முன்னாள் நிதியமைச்சர், பொருளாதார நிபுணர், காங்கிரஸ் கட்சியின் தூண், ஐநா மன்றமே ஏற்றுக்கொண்ட பொருளாதார மேதை இப்படி பல புகழ்களுக்கு சொந்தக்காரரான ப. சிதம்பரத்தின் சரிவின் பின்னணியில் இந்திராணி முகர்ஜி என்ற பெண்ணின் வாக்குமூலம் ஒரு காரணம் உள்ளது என்பதை ஏற்கத்தான் வேண்டும்.