கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் உடற்கல்விதுறையில் 2 ஆம் ஆண்டு படித்து வருபவர் முத்தமிழன். அதே வகுப்பில்  சுசித்ரா என்பவரும் படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுசித்ரா திடீரென முத்தமிழனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக தெரிகிறது. 

இந்நிலையில், முத்தமிழன் மாணவி  சுசித்ரா மீது திடீரென ஆசிட் வீசியுள்ளார். இதைக் கண்ட சக மாணவர்கள் முத்தமிழனைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஆசிட் வீசியதில்  மாணவி சுசித்ரா படுகாயமடைந்தார்.

இதே போல் மாணவர்கள் தாக்கியதில் முத்தமிழனும் படுகாயமடைந்தார். இதையடுத்து காயமடைந்த  இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


 
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.