சென்னை கொட்டிவாகத்தில் பாலாஜி என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் அவரது நண்பர்கள் 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. நேற்று இரவு மதுபானக்கடை அருகே சென்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சினிமா பாணியில் சாலையில் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் நிலைக்குலைந்து கீழே சரிந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த பாலாஜியை உடனே மருத்தவமனைக்குக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அங்கு இருந்த சிசிடிவி காட்சிகள் கொண்டு வைத்து விசாரணையயை தொடங்கினர். பின்னர்  முன்விரோதம் காரணமாக பாலாஜியின் நண்பர்களே அவரைக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. பட்டினப்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த ஐவன்ராஜ், பசூல், பாலாஜி, கார்த்தி, ராஜா ஆகியோரைக் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

கொலை செய்யப்பட்ட பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஈஞ்சம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் சோதனை நடத்திய போது கைத்துப்பாக்கியும் சயனைடும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரில் பாலாஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.